Skip to main content

தகவல்கள்

சில சொற்களில் இப்புதிய கொறோனா வைரஸ்

தொற்று கிருமி

பல வருடங்களாக கண்டுபிடிக்கப்பட்ட இக் கொறோனா வைரஸ், ஓர் தொற்று வைரஸ் ஆகும். இது மிருகங்களால் ஏற்பட்டது. இவ்வைரஸ் மனிதர்களைத்தொடும்போது, சுவாசம் சம்பந்தமாக கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள்.

தொற்றுநோய் பற்றிக்கற்கும் பாடம்

புதிய கொறோனா வைரசின் பெயர் : «SARS - CoV-2» ஆகும். இது மார்கழி மாதம் 2019 ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவக் காரணம், இவ் வைரஸ் தொற்று வைரஸ் ஆகும். மற்றும் மனிதர்களின் உடலில் தேவையான நோய்யெதிர்ப்புச்சக்தி இல்லை என்பதாலும் ஆகும் . சீனாவில் நோயாளிகள் குறைந்துகொண்டிருக்கின்றன, ஆனால் ஐரோப்பாவில் கூடிக்கொண்டு போகின்றன.

பரவுதல்

புதிய கொறோனா வைரஸ் முக்கியமாக நெருங்கிய மற்றும் நீடித்த தொடர்பு மூலம் பரவுகிறது. அதாவது, நீங்கள் ஒரு நோயாளியுடம் 2 மீட்டரிற்குக் குறைய நின்று 15 நிமிடங்கள் தொடர்பு உள்ளதாய் இருந்தால் உங்களிற்கு வைரஸ் தொற்றியிருக்கலாம். ஓர் நோயாளி இருமும்போது அல்லது தும்மும்போது, நீர்த்துளிகளால் இந்த வைரஸ் பரவுகிறது, அல்லது சிறிது நேரத்தில் தொட்ட மேற்பரப்புகளில் இவ் வைரஸ் விடப்படுகிறது, அதை நாம் தொட்டால், நமக்கும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இது காற்றில் இடைநிறுத்தப்படாமல் இருப்பதால், நீர்த்துளிகளுடன் நேரடி தொடர்பு இல்லாமல் பரவாது.

வைரஸ் தொற்றிய மணியிற்கும் அறிகுறிகள் ஏற்பட்ட மணியிற்கும் இடையிலுள்ள நேரம்

வைரஸ் தொற்றிய மணியிற்கும் அறிகுறிகள் ஏற்பட்ட மணியிற்கும் இடையிலுள்ள நேரம் கூடுதலாக 5 நாட்கள் தொடக்கம் 14 நாட்கள் வரை ஆகும். ஓர் நோயாளியிற்கு சுவாசம் சம்பந்தமாக வைரஸ் ஏற்படும்போது (இருமல், காய்ச்சல்) அவரின் அறிகுறிகள் வலிமையாக இருக்கும்போது தான், மற்றவர்களிற்கு மிகவும் விரைவில் தொற்றக்கூடியதாக இருக்கலாம். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே வைரஸைப் பரவ வாய்ப்புள்ளது.

கிளினிக்

COVID-19 நோயறிதலுக்காக மூக்கு வழியாக தேய்த்து எடுக்கப்படும் செல்களின் பரிசோதனை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிற சோதனைகள் தோன்றத் தொடங்குகின்றன. உதாரணத்திற்கு, சீரம் வழியாக ( அதாவது இரத்தம்) நோய்த்தொற்றுக்கு பதிலளிக்கும் விதமாக உடல் ஆன்டிபாடிகளை உருவாக்கியதா என்பதைக் கண்டறிய முடியும் மற்றும் மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மதிப்பிட உதவும், முன்னர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தலாமா என்பதை தீர்மானிப்பதில் சீரம் வழியாக பரிசோதிப்பது பயனுள்ளதாகும். இருப்பினும், இந்த சோதனைகளின் செயல்திறன் இன்னும் அறியப்படவில்லை. இந்த சோதனைகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பல ஆய்வுகள் அவசியம்.

பாதிக்கப்படக்கூடிய மக்கள்கள்

65 வயதிற்கு மேற்பட்டோர், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோயாளிகள், சக்கரை நோய், இதயம் சார்ந்த நோய், சுவாசம் சார்ந்த நோய் போன்ற நோய்கள் உள்ளவர்களிற்கு இவ் வைரஸ் ஏற்பட்டால் வேறு கடுமையான சிக்கல்கள் கண்டு, உயிரிற்கு ஆபத்தாகவும் இருக்கலாம். ஒவ்வாமையால் (allergie) ஏற்படும் ஆத்துமா நோய் (asthme, ஈழை நோய்) ஆபத்துக் காரணிகளுள் அடங்காது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறிப்பாகப்பாதிக்கப்படக்கூடியவர்கள் இல்லை. இருந்தும் அவர்கள், முன்னெச்சரிக்கைக் கொள்கையைப் பின்பற்றி கவனமாக இருத்தல் முக்கியம்.

சிறுவர்கள்

சிறுவர்களும் வயது வந்தவர்களைப்போல இவ் வைரஸால் பாதிப்படைய ஒரே சதவீத்த்தில் ஆபத்தானவர்கள். ஆனால் அவர்களிற்கு முதியோரை விட லேசான அறிகுறிகள் ஏற்படும் (காய்ச்சல், இருமல்). அல்லது அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் வைரஸை வேறு மனிதர்களிற்குப் பரவலாம். அப்படி அறிகுறி இல்லாமல், நோயைப் பரபுபவர்களை "porteurs sains" என்போம். அதனால் தான் மேல் அதிகாரம், பாடசாலைகளை மூட முடிவுசெய்தார்கள்.

சிகிச்சைகள்

Covid-19 என்னும் நோயிற்கு சிகிச்சை இல்லை. இரண்டு மருத்துவ ஆய்வுகள், chloroquine என்னும் ரசாயப் பொருள், மூக்கு வழியாக வைரஸின் வெளியேற்றம், வேறு கடுமையான சிக்கல்கள் மற்றும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றைக் குறைக்கலாம் என்று கூறுகின்றன. வைரஸை எதிர்க்கும் மருந்துகள் (remdesivir, lopinavir/ritonavir) விசாரணையில் இருக்கின்றன. சற்று காலம் தாண்டினதும் மருந்துகளின் முடிவுகள் கிடைக்கும்.

முன்னெச்சரிக்கைகள்

சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றினால், வைரஸை சந்திப்பதின் ஆபத்து விரைவாகக் குறைந்துவிடும். ஒருத்தர் ஒருத்தருக்கிடையில் 2 மீட்டர் இருப்பது நன்று (வீட்டிலும்). முகத்தைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், பொதுப் பொருள்களைத் தொட்டதும் கைகளைக்கழுவவேண்டும். நம்மைப் பாதுகாக்க சுகாதார நடவடிக்கைகளையும் (கை கழுவுதல்), ஒருத்தர் ஒருத்தர் தள்ளி தூர நிற்பதையும் தவிர, வேரொன்றும் உதவாது. (மருந்துகள், மருத்துவ தாவரங்கள் ஒன்றும் உதவாது).

நோய் இல்லாதவர்கள் பொது இடங்களில் எவ்வகையான முகமூடிகளையும் அணிவது தவறு. முகமூடிகள் நம்மை கிருமிகளிலிருந்து ஒழுங்காகப்பாதுகாக்காது. ஏனெனில், நீர்த்துளிகள் மிகுதிமுகத்தில் படலாம், மற்றும் நாம் கைகளால் முகமூடியைத் தொடும் போதெல்லாம், நமக்குப் பாதுகாப்பாகாது. முகமூடி அணிவதால் தவறான பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.

கொறோனா பரிசோதனையின் கருவி

பங்குனி 2020இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தளம் வெப்பமண்டல, பயண மற்றும் தடுப்பூசி சிகிச்சையகம் மற்றும் unisanté பொறியாளர்களின் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டது. இவ்விதமான பரிசோதனை தளத்தை வல்லுநர்களின் நீண்ட அனுபவத்தால், தொற்றுநோய் , மருத்துவ, பொது சுகாதார மற்றும் தகவல் தொழில்னுட்ப நிபுணர் ஆகிய இவர்கள் பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிகவும் எளிதாக அவர்களிற்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்கும் இந்த தளத்தை உருவாக்கினார்கள். இப்பரிசோதனை தளம் பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (வலைத்தளம்) பரிந்துரைகள் மற்றும் அறிவியல் இலக்கியம், இன்றய மருத்துவ அறிவை சான்றது.

டிஜிட்டல் சுகாதாரத்தில் unisanté ஒரு முன்னோடி மையமாக இருக்கின்றது

இந்த கொறோனா பரிசோதனையின் தளம், மருத்துவ முடிவு எடுக்க உதவும் ஒரு கருவி ஆகும். இதில் unisanté ஒரு முன்னோடி ஆகும். unisanté 15 வருடமாக மேற்கொண்டு வரும் முயற்சியால் மருத்துவ நிர்வாகத்திற்கான உயர் செயல்திறன் கருவிகளை உருவாக்க உதவியானது. நவீன மருத்துவத்தை ஊக்குவிக்கிறது.

இந்த கொறோனா பரிசோதனைத் தளம் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது METIS சங்கத்தின் தன்னார்வ சுகாதார மாணவர்களால் அத்துடன் unisanté மற்றும் CHUV மருத்துவர்களால் சாத்தியமானது

நாங்கள் coronacheck மூலம் செய்ய முயல்வது என்ன

எங்கள் வழிமுறை பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரைகளின் தழுவலாகும். இந்த இணைப்பைப் பின்பற்றுவதன் மூலம் எங்கள் கருவியின் பின்னால் உள்ள தர்க்கத்தை சுதந்திரமாக ஆலோசிக்க முடியும்